மேலும் செய்திகள்
கிராமங்களில் சைபர் வழக்குகள் அதிகரிப்பு
01-May-2025
பெங்களூரு: பெங்களூரில் பதிவாகும் சைபர் குற்ற வழக்குகள் 30 சதவீதம் குறைந்துள்ளதாக போலீஸ் கமிஷனர் தயானந்தா கூறி உள்ளார்.பெங்களூரில் அவர் அளித்த பேட்டி:பெங்களூரில் சைபர் குற்ற வழக்குகள் 30 சதவீதம்; இந்திய தண்டனை சட்டத்தின்படி பதிவு செய்யும் வழக்குகள் 12 சதவீதம் குறைந்துள்ளன. இவை தவிர, சொத்து தொடர்பான குற்ற வழக்குகளும், ஓ.டி.பி., மூலம் நடக்கும் சைபர் மோசடி, டிஜிட்டல் கைது வழக்குகளும் குறைந்துள்ளன.நகரில், 2023 முதல் மூன்று மாதங்களில் 3,588; 2024ல் 4,679; 2025ல் 2,838 சைபர் கிரைம் வழக்குகளும் பதிவாகியுள்ளன. இவை, கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது குறைவு.இதற்கு மத்திய, மாநில அரசுகளின் விழிப்புணர்வு பிரசாரங்களே காரணம். எனவே, அரசுக்கு நன்றி. பொது இடங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களால், குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளன. மேலும், கொள்ளை வழக்குகள் 73 சதவீதமும், செயின் பறிப்பு 57 சதவீதமும் குறைந்துள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
01-May-2025