மேலும் செய்திகள்
கோலாரில் திருட்டு போன ரூ.2.57 கோடி பொருட்கள் மீட்பு
1 minutes ago
ரேணுகாசாமி கொலை வழக்கு; பிறழ்சாட்சியான தாய்?
2 minutes ago
நாட்டு மாடு பாதுகாப்பை வலியுறுத்தி 4ம் தேதி நடைபயணம்
3 minutes ago
ராம்நகர்: வரதட்சணை கேட்டு மருமகளை வீட்டை விட்டு துரத்திய மாமனாருக்கு எதிராக அவர் நடத்தி வரும் பள்ளி முன்பு மருமகள் நீதிகேட்டு போராட்டம் நடத்தினார். பெங்களூரு தெற்கு மாவட்டம் மாகடி தாலுகாவில் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்தி வருபவர் கங்கராஜு. இவரது மகன் ரூபேஷ், 29. இவருக்கு கடந்த ஆண்டு பிரீத்தி, 26, என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த ஒரு மாதத்திற்குள் வரதட்சணை கேட்டு பிரீத்தியை மாமனார் கங்கராஜு, மாமியார் வரலட்சுமி ஆகியோர் கொடுமைப்படுத்தினர். இதற்கு ரூபேஷும் துணை போனார். இதனால் பிரீத்தி மன உளைச்சலுக்கு ஆளாகினார். அவரை எங்கேயும் போக விடாமல் வீட்டுக்குள் வைத்து கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்த பிரச்னை சமீபத்தில் தீவிரமடைந்தது. வரதட்சணை தரவில்லை என்றால் ரூபேஷுக்கு 'வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைப்போம்' என மாமனார் கூறினார். மேலும் பிரீத்தி, மாமனாரால் வீட்டிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டார். இதனால், செய்வதறியாது திகைத்த பிரீத்தி, தனது பெற்றோருடன் நேற்று மாகடியில் உள்ள தன் மாமனாருக்கு சொந்தமான பள்ளி முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினார். பின்னர், அவர் மாகடி போலீஸ் நிலையத்தில் தன் கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் மீது புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர். இது குறித்து பிரீத்தி அளித்த பேட்டி: வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்தனர். என்னை, என்னுடைய பெற்றோர் வீடு, கோவில் என எங்கும் செல்ல அனுமதிக்கவில்லை. எந்த ஒரு பொருளையும் எடுக்க வேண்டும் என்றால் கூட மாமியாரிடம் அனுமதி வாங்க வேண்டும். அடிமை போல நடத்தினர். மேலும், என் நடத்தையை சந்தேகப்பட்டனர். என் கணவரை வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்து விடுவேன் என மிரட்டினர். என்னை பயன்படுத்தி விட்டு துாக்கி போடுவதற்கு, பெண்கள் என்ன 'டிஷ்யூ பேப்பரா'. திருமணம் நடந்து முடிந்து, ஒரு ஆண்டு முழுதும் உன் வீட்டிலிருந்து அதை கொண்டு வா, இதை கொண்டு வா என 'டார்ச்சர்' செய்தனர். என்னை வீட்டிலிருந்து துரத்தி விட்டனர். எனக்கு நீதி கிடைக்க வேண்டும். இல்லையெனில், எனது போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
1 minutes ago
2 minutes ago
3 minutes ago