உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / அர்க்காவதி நதி புனரமைப்புக்கு நிபுணர் குழு அமைக்க முடிவு

அர்க்காவதி நதி புனரமைப்புக்கு நிபுணர் குழு அமைக்க முடிவு

பெங்களூரு: அர்க்காவதி நதியை புனரமைக்க நிபுணர் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக, பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் கூறினார்.பெங்களூரின் குடிநீர் தேவையை 1936 முதல் 2000ம் ஆண்டு வரை நிறைவேற்றிய அர்க்காவதி நதியை புனரமைப்பது குறித்து, பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.பெங்களூரு நகர, பெங்களூரு ரூரல் மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட பஞ்சாயத்து அதிகாரிகள், நீர்வளத்துறை, மாநகராட்சி, பி.டி.ஏ., உட்பட பல துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் ராம்பிரசாத் மனோகர் பேசியதாவது:நந்திமலையில் இருந்து திப்பகொண்டனஹள்ளி வரை 53 கி.மீ., துாரம் ஓடும் அர்க்காவதி நதி 1,400 சதுர கி.மீ., பரப்பளவை கொண்டது. பெங்களூரின் குடிநீர் ஆதாரமாக இருந்த இந்த நதிக்கு, துணை முதல்வர் சிவகுமார் வழிகாட்டுதலின்படி புத்துயிர் அளிக்க முடிவு செய்து உள்ளோம்.நதியை புனரமைக்க நிபுணர் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. நதிக்கு புத்துயிர் அளிக்க அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.எத்தினஹொளே அணை, அர்க்காவதி நதி நீரை திப்பகொண்டனஹள்ளி அணையில் கலந்து தண்ணீர் வழங்குவது நோக்கமாக இருந்தது. ஆனால், பெங்களூரு நகரின் தொழில் துறை வளர்ச்சி, தொழிற்சாலைகள் வெளியிடும் கழிவுகள், சுற்றுச்சூழல் மாசுபாட்டால் திப்பகொண்டனஹள்ளி அணை தண்ணீர் மாசுபட்டு குடிப்பதற்கு ஏற்றதாக இல்லை. இதனால் அர்க்காவதி நதியை புனரமைக்கும் பணியை துரிதப்படுத்தும் அவசியம் ஏற்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை