உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தங்கவயலில் கருணாநிதி சிலை கர்நாடக அரசுக்கு கோரிக்கை

தங்கவயலில் கருணாநிதி சிலை கர்நாடக அரசுக்கு கோரிக்கை

தங்கவயல் : தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி 102ம் ஆண்டு பிறந்த நாள் விழா கூட்டம், கர்நாடக மாநில தி.மு.க., அமைப்பாளர் ராமசாமி தலைமையில் நேற்று நடந்தது.தங்கவயல் தி.மு.க., சார்பில், ராபர்ட்சன்பேட்டை கிங் ஜார்ஜ் அரங்கில் நடந்த விழாவில் தங்கவயல் தி.மு.க., அவைத் தலைவர் பொன் சாரங்கபாணி வரவேற்றார். நாராயண மூர்த்தி தமிழ்த் தாய் வாழ்த்து பாடினார். முனிரத்தினம், அருணாசலம், வக்கீல் மணிவண்ணன், கை.பெருமாள், போர் முரசு கதிரவன், ஆர்.எஸ்.கிரி, ஆனைமலை அல்தாப் ஆகியோர் கருணாநிதியின் அரசியல், இலக்கியம், ஆட்சித் திறன் உட்பட பன்முகத் தன்மைகளை புகழ்ந்து பேசினர். த. கண்ணையன் நன்றி கூறினார். பாவலர் சண்முகம் நல உதவிகள் வழங்கினார்.'தங்கச் சுரங்க தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகை வழங்கல்; தங்கச் சுரங்க தொழிலாளர்கள் வீடுகளை சொந்தமாக்குதல்; பி.இ.எம்.எல்., ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம்; அதிக பெட்டிகளுடன் கூடுதலான ரயில்கள்; மாரிகுப்பம் -- குப்பம் இணைப்பு ரயில் பாதை பணிகள் விரைவு.'தங்கவயலில் கருணாநிதி சிலை அமைக்க நடவடிக்கை; பங்காருபேட்டை ரயில் நிலையத்திலிருந்து தங்கவயலுக்கு இரவு நேர பஸ் வசதி' உட்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !