உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / போலி டாக்டர்கள் அதிகரிப்பு தோல் சிகிச்சை நிபுணர்கள் புகார்

போலி டாக்டர்கள் அதிகரிப்பு தோல் சிகிச்சை நிபுணர்கள் புகார்

பெங்களூரு : 'பெங்களூரின் போலி டாக்டர்கள், சட்டவிரோதமாக சரும சிகிச்சை, தலைமுடி அறுவை சிகிச்சை மற்றும் அழகுக்கலை சிகிச்சைகள் அளிக்கின்றனர். 'இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சரும நோய் வல்லுநர்கள், சுகாதாரத்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து, அவர்கள் அளித்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது: பெங்களூரில் போலி டாக்டர்கள், முறையாக மருத்துவம் படிக்காமல், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். தேசிய கல்வி ஆணையம் 2022ல் வெளியிட்ட சுற்றறிக்கையில், சரும நோய் மருத்துவ சிகிச்சை அல்லது பிளாஸ்டிக் சர்ஜரியில் உரிய பட்டப்படிப்பை முடித்திருப்பது கட்டாயம். இந்த கல்வித்தகுதி உள்ள டாக்டர்கள் மட்டுமே, சரும சிகிச்சை, தலைமுடி சிகிச்சை, காஸ்மெடிக் சர்ஜரி உள்ளிட்ட சிகிச்சை அளிக்க வேண்டும். ஆனால், பெங்களூரில் கல்வித்தகுதி இல்லாமல் சர்ஜரி செய்கின்றனர். மாநிலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட, அழகுக் கலை, சரும சிகிச்சை அளிக்கும் போலி டாக்டர்கள் உள்ளனர். பெங்களூரில் 50க்கும் மேற்பட்ட போலியான சரும சிகிச்சை டாக்டர்கள் உள்ளனர். இவர்கள் மீது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பெங்களூரில் செயல்படும் இத்தகைய போலி கிளினிக்குகளை மூட வேண்டும். சரும வல்லுநர்களே பெங்களூரின் பல்வேறு கிளினிக்குகளுக்கு, வாடிக்கையாளர்கள் போன்று சென்று, ஆய்வு செய்தனர். போலி டாக்டர்கள் நடத்தும் கிளினிக்குகளின் பட்டியல் தயாரித்து, சுகாதாரத்துறையிடம் தாக்கல் செய்யப்பட்டது. நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சரும வல்லுநர்களின் புகாரின்படி, சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணையை துவக்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை