உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / டி.ஜி.பி., அலோக் மோகன் பதவி 21 நாட்கள் நீட்டிப்பு

டி.ஜி.பி., அலோக் மோகன் பதவி 21 நாட்கள் நீட்டிப்பு

பெங்களூரு: கர்நாடக டி.ஜி.பி., அலோக் மோகனுக்கு அடுத்த மாதம் 21ம் தேதி வரை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.கர்நாடக டி.ஜி.பி.,யாக பணியாற்றி வருபவர் அலோக் மோகன். இவர் 1987ம் ஆண்டு ஐ.பி.எஸ்., குழுவை சேர்ந்தவர். இவரது பதவிக்காலம் இன்றுடன் நிறைவு பெற இருந்தது.புதிய டி.ஜி.பி.,க்கான போட்டியில் மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சலீம், பிரசாந்த் குமார் தாக்கூர், ராமசந்திர ராவ், மாலினி கிருஷ்ணமூர்த்தி, அலோக் குமார் ஆகியோர் இருக்கின்றனர்.இவர்களில் சலீம் அல்லது பிரசாந்த் குமார் தாக்கூர் புதிய டி.ஜி.பி., ஆகலாம் என்றும், கன்னடரான சலீமுக்கே அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.டி.ஜி.பி.,க்கள் இரண்டு ஆண்டுகள் பணியில் இருக்க வேண்டும் என்ற, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக்காட்டி, தன் பதவிக் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று அரசுக்கு, அலோக் மோகன் கோரிக்கை வைத்திருந்தார்.இந்நிலையில் டி.ஜி.பி., நியமனம் தொடர்பாக நேற்று மாலை உள்துறை அமைச்சர் பரமேஸ்வருடன், பெங்களூரு காவேரி இல்லத்தில் முதல்வர் சித்தராமையா ஆலோசனை நடத்தினார். அப்போது, அலோக் மோகன் பதவிக் காலத்தை மே 21ம் தேதி வரை நீட்டிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது.கடந்த 2023ம் ஆண்டு மே 22ம் தேதியில் இருந்து, அலோக் மோகன் டி.ஜி.பி., பதவியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி