உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பள்ளம் தோண்டிய போது மண் சரிந்து விழுந்து  தர்மபுரி தொழிலாளி பலி

 பள்ளம் தோண்டிய போது மண் சரிந்து விழுந்து  தர்மபுரி தொழிலாளி பலி

சர்ஜாபூர்: அடுக்குமாடி குடியிருப்பில், வடிகால்வாய் பணிக்காக பள்ளம் தோண்டிய போது, மண் சரிந்து விழுந்ததில் தர்மபுரி தொழிலாளி பலியானார். பெங்களூரு சர்ஜாபூர் அருகே தொம்மசந்திரா - வர்த்துார் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், சாக்கடை வடிகால்வாய் பணிக்காக பள்ளம் தோண்டும் பணி நேற்று முன்தினம் இரவு நடந்தது. தமிழகத்தின் தர்மபுரி மாவட்டம் மணியதஹள்ளி கிராமத்தை சேர்ந்த சிதம்பரம், 45 என்பவர் மட்டும் தனியாக, பள்ளம் தோண்டி மண்ணை எடுத்து மேல் பகுதியில் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மண் சரிந்து அவர் மீது விழுந்தது. மண்ணில் புதைந்த அவர் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்த வர்த்துார் போலீசார், தீயணைப்பு படையினர் அங்கு சென்று, சிதம்பரத்தின் உடலை மீட்டனர். சிதம்பரம் சகோதரர் முனியப்பா அளித்த புகாரில், வர்த்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி