உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / விதான்சவுதாவில் நாய்கள் தொல்லை விதான்சவுதாவில் நாய்கள் தொல்லை: அரசிடம் சபாநாயகர் காதர் கோரிக்கை

விதான்சவுதாவில் நாய்கள் தொல்லை விதான்சவுதாவில் நாய்கள் தொல்லை: அரசிடம் சபாநாயகர் காதர் கோரிக்கை

பெங்களூரு: ''நாய்களை பாதுகாக்க தனி வசதி செய்யும்படி மாநில அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்,'' என, சபாநாயகர் காதர் தெரிவித்தார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: விதான்சவுதா வளாகத்தில், 53 நாய்கள் உள்ளன. இவை விதான்சவுதாவுக்குள் நுழையாமல் தடுக்க, கேட் வசதி இல்லை; விதான்சவுதா வளாகத்தில் நுழைந்து அச்சுறுத்துகின்றன. எம்.எல்.ஏ.,க்கள் காலை நேரத்தில் நடைப் பயிற்சி செய்வதற்கும், பொது மக்களுக்கும் நாய்களால் தொந்தரவு ஏற்படுகிறது. எனவே நாய்களின் பாதுகாப்புக்கு, ஷெட் அமைப்பது குறித்து ஆலோசிக்கிறோம். அரசு சாரா தொண்டு அமைப்புகளின் உதவியுடன், நாய்களை வளர்ப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டுள்ளது. நாய்களை பாதுகாக்க, தனி வசதி செய்யும்படி மாநில அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். அரசு ஒப்புதல் அளித்த பின், நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !