உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 4 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்கள்

4 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்கள்

தங்கவயல்: ராபர்ட்சன் பேட்டை பால கிருஷ்ணா லே - அவுட் பகுதியில் 4 வயது சிறுவனை மூன்று தெருநாய்கள் சேர்ந்து கடித்து காயப்படுத்தின. தங்கவயலில் அனைத்து பகுதிகளிலும் தெருநாய்கள் அதிகரித்துள்ளது. இவற்றை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெமல்நகர், கிருஷ்ணாபுரம், பாலக்காடு லைன், உட்பட பல இடங்களில் தெரு நாய்கள் தாக்குவதால், அடிக்கடி மான்கள் உயிரிழக்கின்றன. ராபர்ட்சன் பேட்டை, ஆண்டர்சன் பேட்டை, சுரங்க குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ராபர்ட் சன் பேட்டை, பாலகிருஷ்ணா லே - அவுட்டைச் சேர்ந்த 4 வயது சிறுவன் அலெக்ஸ், தன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென மூன்று நாய்கள் பாய்ந்து சிறுவனை கடித்துள்ளன. சிறுவனின் அலறல் சத்தத்தால், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து நாய்களை விரட்டியடித்தனர். சிறுவனுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை