மேலும் செய்திகள்
சிஞ்சோலியில் நிலநடுக்கம் கிராம மக்கள் பீதி
21-Oct-2025
பீதர்: பீதர் மாவட்டத்தின், பல்வேறு இடங்களில் நேற்று அதிகாலையில் நில நடுக்கம் ஏற்பட்டது. மக்கள் கலக்கத்துடன் வெளியே ஓடி வந்தனர். பீதர் மாவட்டம், சிடகுப்பா தாலுகாவின், பாஸ்கர் நகர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில், நேற்று அதிகாலை 3:45 மணியளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. கிராமத்தினர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது, பூமிக்குள் இருந்து பெரும் சத்தம் எழுந்தது. பொருட்கள் சிதறி விழுந்தன. மக்கள் பீதியுடன், வெளியே ஓடி வந்தனர். வீட்டுக்குள் செல்லாமல் விடிய, விடிய வெளியிலேயே நேரத்தை கடத்தினர். நேற்று காலையில் நீண்ட நேரமாகியும், வீட்டுக்குள் செல்ல பயந்து வெளியில் இருந்தனர். கிராமங்களில் நில நடுக்கம் ஏற்பட்டதை, இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையத்தின் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். நில நடுக்கத்தின் அளவு 2.9 ரிக்டராக பதிவாகியுள்ளது. லேசான நில நடுக்கம் என்பதால், எந்த விதமான அசம்பாவிதமும் ஏற்படவில்லை. பயப்பட தேவையில்லை என, அதிகாரிகள் கூறியுள்ளனர்.
21-Oct-2025