உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / போலி ஜீன்ஸ் தயாரிப்பு ரூ.30 லட்சம் ஆடை பறிமுதல்

போலி ஜீன்ஸ் தயாரிப்பு ரூ.30 லட்சம் ஆடை பறிமுதல்

மாதநாயகனஹள்ளி: பெங்களூரில் சமீப காலமாக சிறிய தெருக்களிலும், கடைகளிலும் குறைந்த விலையில் பிராண்ட் ஜீன்ஸ்கள் விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. இது குறித்து சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்துகின்றனர். பெங்களூரு பைலகோனேனஹள்ளியில் போலி பிராண்ட் ஜீன்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருவதாக, மாதநாயகனஹள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து நேற்று, இத்தொழிற்சாலைகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பெயரில் போலி ஜீன்ஸ் தயாரிப்பதை கண்டு பிடித்தனர். இதையடுத்து, 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான போலி ஜீன்ஸ் ஆடைகளை, அவர்கள் பறிமுதல் செய்தனர்.தொழிற்சாலை உரிமையாளர் மீது காப்புரிமை மீறல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை