உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / காஸ் கசிந்து தீப்பிடித்ததில் ஐவர் காயம்

காஸ் கசிந்து தீப்பிடித்ததில் ஐவர் காயம்

மைசூரு: மைசூரு மாவட்டம், ஹுன்சூர் தாலுகாவின் குல்குனி கிராமத்தின் குர்ஜன் தெருவில் நிங்கராஜு. இவரது மனைவி ஜோதி. நேற்று காலை, இவரது வீட்டில் காஸ் காலியானது. இதை ஜோதி மாற்ற முற்பட்டபோது, காஸ் கசிந்து தீப்பிடித்தது. அவரது உடையில் தீப்பற்றியது.இவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம், பக்கத்து வீடுகளில் வசிக்கும் ராணியம்மா, ஷீலா, நாகம்மா உட்பட, நால்வர் உதவிக்கு வந்து தீயை கட்டுப்படுத்த முயன்றனர். அப்போது, அவர்கள் மீதும் தீப்பற்றியது. தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர், தீயை அணைத்தனர்.காயமடைந்தவர்களை, கே.ஆர்.மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து, ஹுன்சூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை