மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம் : அதிக ஏரிகள் உள்ள நாடு
14-Apr-2025
பெங்களூரு: ஏரிகளின் மேம்பாட்டு பொறுப்பை ஏற்றுள்ள
பெங்களூரு மாநகராட்சி, முக்கியமான ஏரிகளின் மீது மிதக்கும் சோலார் பேனல்கள்
பொருத்தி, மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.இது குறித்து, பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
நகரின் ஏரிகளை பாதுகாத்து, பராமரிக்க பெங்களூரு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. முக்கியமான ஏரிகளில் மிதக்கும் சோலார் பேனல்கள் பொருத்தி, மின் உற்பத்தி செய்ய திட்டம் வகுத்துள்ளது. அரசு மற்றும் தனியார் ஒருங்கிணைப்பில், சோதனை முறையில் திட்டம் செயல்படுத்தப்படும்.நகருக்குள் உள்ள ஏரிகளில் இத்தகைய திட்டம் கொண்டு வருவது, இதுவே முதன் முறையாகும். மாநகராட்சியின் வானிலை ஆய்வு பிரிவு, பல்வேறு ஏஜென்சிகளுடன் ஆலோசனை நடத்தி, அறிக்கை அளிக்கும். அதன்பின் திட்டப் பணிகள் துவக்கப்படும்.மிதக்கும் சோலார் பேனல் பொருத்தி, மின் உற்பத்தி செய்ய எலஹங்கா ஏரி மற்றும் ராச்சேனஹள்ளி ஏரி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏரிகளின் பரப்பளவு அதிகம். ஆண்டு முழுதும் தண்ணீர் இருக்கும். எலஹங்கா ஏரியில் மூன்று, ராச்சேனஹள்ளி ஏரியில் இரண்டு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய ஆலோசிக்கிறோம்.மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த, கர்நாடக ஏரிகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.மின்சாரம் உற்பத்தி செய்து, விற்பனை செய்ய கர்நாடக மின் ஒழுங்கு முறை ஆணையம் மற்றும் கே.ஆர்.இ.டி.எல்., இடம் ஒப்புதல் பெற வேண்டும். பெங்களூரு நகர மாவட்ட கலெக்டரின் அனுமதியும் பெறப்படும்.ஏற்கனவே நாட்டின் சில இடங்களில், நதிகளின் கால்வாய், பெரிய ஏரிகள் மீது சோலார் பேனல் பொருத்தி, மின்சாரம் உற்பத்தி செய்கின்றனர். அதே போன்று பெங்களூரிலும், மின் உற்பத்தி செய்யலாம். ஏரியின் மொத்த பரப்பளவின், 10 சதவீதம் இடத்தில் சோலார் பேனல் பொருத்த விதிமுறைகளில் வாய்ப்புள்ளது. திட்டத்துக்கு தனியார் நிறுவனங்களே முதலீடு செய்யும். மாநகராட்சி செலவிடாது.பெங்களூரு மாநகராட்சி, தன் அனைத்து கட்டடங்களின் கூரையில் சோலார் பேனல் பொருத்தி, மின்சாரம் பொருத்தவும் திட்டமிட்டுள்ளது. 15வது நிதி ஆயோக் நிதியுதவியில் பணிகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர். ஏரிகளின் மீது சோலார் பேனல் பொருத்தி, மின்சாரம் உற்பத்தி செய்வதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் பாசி இல்லாத நீர் என்பதை உறுதி செய்ய வேண்டும். ஏரியில் இருந்து மித்தேன் வாயு வெளியேற இடையூறு ஏற்படக்கூடாது. ஆண்டு முழுதும் சோலார் பேனலை நிர்வகிக்க வேண்டும். அரசு, தனியார் ஒருங்கிணைப்பில் திட்டத்தை செயல்படுத்தினால், நிதி வழங்க பலரும் முன் வருவர். ஆனந்த் மல்லேவாடா,ஏரி பாதுகாவலர்.
14-Apr-2025