உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / போவி ஆணைய முறைகேடு முன்னாள் எம்.டி., கைது

போவி ஆணைய முறைகேடு முன்னாள் எம்.டி., கைது

பெங்களூரு: போவி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு வழக்கில், முன்னாள் எம்.டி.,யை அமலாக்கத்துறை கைது செய்து உள்ளது.கர்நாடக அரசின் சமூக நலத்துறைக்கு உட்பட்ட போவி மேம்பாட்டு ஆணையத்தில், கடந்த பா.ஜ., ஆட்சியில் 97 கோடி ரூபாய் முறைகேடு நடந்தது பற்றி சி.ஐ.டி., விசாரிக்கிறது. சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகிறது. கடந்த 4ம் தேதி பெங்களூரு வி.வி.டவரில் உள்ள போவி மேம்பாட்டு ஆணைய அலுவலகம் உட்பட 10 இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். இந்த சோதனையின் போது சில முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் சிக்கின.அதன் அடிப்படையில் போவி மேம்பாட்டு ஆணைய, முன்னாள் பொது மேலாளர் நாகராஜப்பா கடந்த 6ம் தேி கைது செய்யப்பட்டார். அவரை தங்கள் காவலில் எடுத்து, அமலாக்கத்துறையினர் விசாரிக்கின்றனர்.இந்நிலையில், சட்டவிரோத பண பரிமாற்றத்தில், போவி மேம்பாட்டு ஆணைய முன்னாள் எம்.டி., லீலாவதிக்கும் தொடர்பு இருப்பது தெரிந்தது. அவரை நேற்று முன்தினம் அமலாக்கத்துறை கைது செய்தது. மருத்துவ பரிசோதனைக்கு பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஏழு நாட்கள் அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ஜெய்ஹிந்த்புரம்
ஜூன் 09, 2025 21:36

செய்தியை நன்னா படிச்சீரா? "கடந்த பா.ஜ., ஆட்சியில் 97 கோடி ரூபாய் முறைகேடு நடந்தது" ன்னு போட்டிருக்கு. அப்போ யாரை வெரட்டணும்? ஒடிசாவில 2021 பேட்ச் ஐஏஎஸ் புள்ளையாண்டான் 47 லட்சம் லஞ்சம் வாங்குறான். ஏற்கனவே எத்தனை கோடி அசுரத்தனமாக ஆட்டையை போட்டானோ. லஞ்சத்தை உங்க மோடி சும்மா ஒளிச்சு வெச்சி நல்லவராட்டாம் நாடகமாடி உங்களை முட்டாளாக்குறார்.


RAMAKRISHNAN NATESAN
ஏப் 18, 2025 14:15

அடி கள்ளி ....


Ramesh Sargam
ஏப் 18, 2025 12:54

கோவிட் பரவலைவிட இந்த ஊழல் பரவல் இந்தியாவில் மிக மிக வேகமாக பரவி வருகிறது. கோவிட்டை வாக்சின் மூலம் கட்டுப்படுத்திவிட்டோம். ஆனால் இந்த ஊழலை எப்படிக்கட்டுப்படுத்துவது?


முக்கிய வீடியோ