உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கஞ்சா விற்ற 2 பெண் உட்பட நால்வர் கைது

கஞ்சா விற்ற 2 பெண் உட்பட நால்வர் கைது

ராஜாஜிநகர்:பெங்களூரின், ராஜாஜிநகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகில், நேற்று மதியம் சிலர் கஞ்சா விற்பதாக கலால் துறைக்கு தகவல் வந்தது.இதையடுத்து அதிகாரிகள், உடனடியாக அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு கஞ்சா விற்ற நால்வர், கையும், களவுமாக சிக்கினர்.சம்பத் பிரதான், 23, தபாஷ் பிரதான், 22, ஜகன் பதஞ்சி, 24, தீபாஞ்சலி, 22, ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.இவர்கள் நால்வரும் ஒடிஷாவை சேர்ந்தவர்கள். பெங்களூரில் வசித்து கொண்டு, கஞ்சா விற்றது விசாரணையில் தெரிந்தது. அவர்கள் மீது, போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ், வழக்கு பதிவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !