உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தனியார் மருத்துவமனைகளுக்கு சுகாதார துறை எச்சரிக்கை

தனியார் மருத்துவமனைகளுக்கு சுகாதார துறை எச்சரிக்கை

பெங்களூரு: ‘‘முக்கிய சிகிச்சைக்கான விலை பட்டியலை காட்சிப்படுத்தாத தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என, சுகாதாரத்துறை எச்சரித்து உள்ளது. கர்நாடகாவில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் முக்கிய சிகிச்சைகளுக்கான விலைப்பட்டியளை காட்சிப்படுத்த வேண்டும் என, மாநில சுகாதாரத்துறை கடந்த மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் பின்பற்றப்படுகிறதா என்பதை ஆராய, மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு, சுகாதாரத்துறை உத்தரவிட்டு உள்ளது. மேலும், விலை பட்டியலை காட்சிப்படுத்தாத தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்