உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஆரோக்கியம் காக்கும் ஆப்பிள் பாயசம்

 ஆரோக்கியம் காக்கும் ஆப்பிள் பாயசம்

பண்டிகை நாட்களில் பெரும்பாலான இனிப்புகளில் முதன்மையாக இருப்பது பாயசம் தான். இதில் பல வகை பாயசம் உள்ளன. இந்த வாரம், ஆப்பிள் பாயசம் செய்வதை பார்க்கலாம். தேவையான பொருட்கள்  ஆப்பிள் - 5  ஏலக்காய் - 6  முந்திரி - 10  உலர் திராட்சை - 10  நெய் - சிறிதளவு  பேரீச்சம்பழம் - 5  பாசிபருப்பு - 1 டம்ளர்  வெல்லம் - அரை கிலோ  தேங்காய் பால் - 1 டம்ளர் செய்முறை: ஆப்பிள் பாயசம் செய்ய, ஆப்பிளில் உள்ள விதைகளையும், தோல்களையும் நீக்கவும். ஆப்பிளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பாசிப்பருப்பை வேக வைக்கவும். ஓரளவிற்கு வெந்தவுடன் வெல்லத்தை பொடியாக்கி உடன் சேர்த்து கொள்ள வேண்டும். 10 நிமிடங்களுக்கு பின், தயார் செய்து வைத்துள்ள ஒரு டம்ளர் தேங்காய் பாலை சேர்த்து, கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பருப்பு நன்கு வெந்தவுடன் இதனுடன் ஏலக்காய், முந்திரி, உலர் திராட்சையை உடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக ஐந்து நிமிடங்களுக்கு பின் ஆப்பிள், பேரீச்சம் பழங்களை சேர்த்தால், ஆரோக்கியம் நிறைந்த ஆப்பிள் பாயசம் தயாராகிவிடும். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை