உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கழிவுகள் கொட்டிய மருத்துவமனைக்கு அபராதம்

 கழிவுகள் கொட்டிய மருத்துவமனைக்கு அபராதம்

பெங்களூரு: பொது மக்களுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் வகையில், பொதுஇடத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டிய மருத்துவமனைக்கு, 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பெங்களூரின் ஜெயநகரில், பி.டி.எம்., லே - அவுட் முதல் ஸ்டேஜில், நேற்று காலை மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டிருந்தன. ஊசிகள், சிரிஞ்சுகள், பிளாஸ்டர்கள் உட்பட, அபாயகரமான மருத்துவ கழிவுகள் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டிருந்தன. துப்புரவு பணியாளர்கள், நேற்று முன் தினம் காலை, சாலையை சுத்தம் செய்ய வந்த போது, மருத்துவ கழிவுகளை கவனித்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார், மருத்துவ கழிவுகளில் அந்த மருத்துவமனையில் பெயர் இருந்ததை கண்டுபிடித்தனர். அதிகாரிகளின் உத்தரவுபடி, நடவடிக்கை எடுத்த போலீசார், அந்த தனியார் மருத்துவமனைக்கு, 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மருத்துவமனை நிர்வாகத்தினர், ஆன்லைன் வழியாக அபராதம் விதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்