ஹூப்பள்ளி - ராமேஸ்வரம் ரயில் ஏப்.,12 முதல் மீண்டும் இயக்கம்
பெங்களூரு; 'நிறுத்தப்பட்டிருந்த ஹூப்பள்ளி - ராமேஸ்வரம் வாராந்திர விரைவு ரயில், மீண்டும் இயக்கப்படும்' என, தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதுதொடர்பாக தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: ரயில் எண் 06527: பங்கார்பேட்டை - விஸ்வேஸ்வரய்யா முனையம் மெமு சிறப்பு ரயில், வரும் 12, 15, 19, 22ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகின்றன எண் 06528: விஸ்வேஸ்வரய்யா முனையம் - பங்கார்பேட்டை மெமு ரயில் வரும் 13, 16, 20, 23ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகின்றன எண் 16521: பங்கார்பேட்டை - கே.எஸ்.ஆர்., பெங்களூரு மெமு ரயில், ஏப்., 15, 22ம் தேதிகளில் ஒயிட்பீல்டுடன் நிறுத்தப்படும் எண் 06269: மைசூரு - விஸ்வேஸ்வரய்யா முனையம் தினசரி பயணியர் ரயில், வரும் 12, 15, 19, 22ம் தேதிகளில், கே.எஸ்.ஆர்., பெங்களூரு, யஷ்வந்த்பூர், ஹெப்பால், பானஸ்வாடி வழியாக செல்லும். பெங்களூரு கன்டோன்மென்டில் நிற்காது எண் 06270: விஸ்வேஸ்வரய்யா முனையம் - மைசூரு தினசரி பயணியர் ரயில், ஏப்., 15, 22ம் தேதிகளில் விஸ்வேஸ்வரய்யா முனையம், பானஸ்வாடி, ஹெப்பால், யஷ்வந்த்பூர், கே.எஸ்.ஆர்., பெங்களூரு செல்லும். பெங்களூரு கன்டோன்மென்டில் நிற்காது எண் 11013: லோக்மான்ய திலக் டெர்மினல் - கோயம்புத்துார் தினசரி விரைவு ரயில், ஏப்., 14, 21ல் கவுரிபிதனுார், எலஹங்கா, லொட்டேகொள்ளஹள்ளி, யஷ்வந்த்பூர், ஹெப்பால், பானஸ்வாடி, கார்மேலரம், ஓசூர் ரயில் நிலையம் வழியாக செல்லும். பெங்களூரு ஈஸ்ட், பெங்களூரு கன்டோன்மென்ட், கே.எஸ்.ஆர்., பெங்களூரு ரயில் நிலையங்களில் நிற்காது. மீண்டும்
நிறுத்தப்பட்டிருந்த ஹூப்பள்ளி - ராமேஸ்வரம் வாராந்திர விரைவு ரயில், மீண்டும் இயக்கப்படும்.ரயில் எண் 07355: ஹூப்பள்ளி - ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில், ஏப்.,12 முதல் ஜூன் 28ம் தேதி வரை இயக்கப்படும்எண் 07356: ராமேஸ்வரம் - ஹூப்பள்ளி வாராந்திர விரைவு ரயில், ஏப்., 13 முதல் ஜூன் 29ம் தேதி வரை இயக்கப்படும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.