உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மர்ம பொருள் வெடிப்பு கணவன், மனைவி பலி

மர்ம பொருள் வெடிப்பு கணவன், மனைவி பலி

ஹாசன்: மர்ம பொருள் வெடித்ததில் சிகிச்சை பெற்று வந்த கணவன், மனைவி இருவரும் உயிரிழந்தனர். ஹாசன் மாவட்டம், ஆலுார் தாலுகா, ஹலே ஆலுரு கிராமத்தில் வசித்து வந்த தம்பதி சுதர்ஷன், 32, - காவியா, 28. இவர்களது வீட்டில் கடந்த மாதம் 30ம் தேதி, மர்ம பொருள் வெடித்தது. இதில், கணவன், மனைவி இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்தனர். நிலைமை மோசமானதால் இருவரும் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்பட்டனர். இதனிடையே வீட்டில் காஸ் சிலிண்டர் வெடிக்கவில்லை; மர்ம பொருள் வெடித்து உள்ளதாக ஆலுார் போலீசார் கூறினர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுதர்ஷன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினமும், மனைவி காவியா நேற்றும் இறந்தனர். அதே சமயம் வெடித்தது என்னவென்று போலீசார் இதுவரை கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ