உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / திடக்கழிவில் இருந்து பயோ காஸ் உற்பத்தி டில்லியில் கர்நாடக துணை முதல்வர் ஆய்வு

திடக்கழிவில் இருந்து பயோ காஸ் உற்பத்தி டில்லியில் கர்நாடக துணை முதல்வர் ஆய்வு

''டில்லி மற்றும் பெங்களூரு மாநகரங்களுக்கு இடையே பல ஒற்றுமைகள் இருக்கின்றன,'' என, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் கூறினார்.கர்நாடக துணை முதல்வர் சிவகுமார், டில்லி மாநகராட்சி மேயர் ராஜா இக்பாலுடன் நேற்று, நகர்ப்புற நிர்வாகம், நகர திட்டமிடல் மற்றும் திடக்கழிவு மேலாண்மை ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தினார்.அதன்பின், நிருபர்களிடம் சிவகுமார் கூறியதாவது:சரியான திட்டமிடல் இல்லாமல் எந்த நகரமும் செயல்பட முடியாது. தலைநகர் டில்லி, வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் திட்டமிடப்பட்ட மாநகரம். இங்கு, பெங்களூரின் மக்கள்தொகையை விட இரண்டு மடங்கு அதிகம்.டில்லிக்கு மூன்று முக்கிய சவால்கள் உள்ளன. -நகர திட்டமிடல், நகரமயமாக்கல் மற்றும் திடக்கழிவு மேலாண்மை. அதே பிரச்னைகளைத்தான்- பெங்களூரிலும் நாங்கள் எதிர்கொள்கிறோம்.பெங்களூரில் இப்போது, சாலைகளை அகலப்படுத்த முடியவில்லை. வீடுகளின் எண்ணிக்கையை விட வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. ஏற்கனவே ஹைதராபாத் மற்றும் சென்னை மாநகரில் ஆய்வு செய்துள்ளேன். டில்லியின் புதிய கொள்கைகளைப் புரிந்து கொள்ள வேண்டியதும் மிகவும் அவசியம்.பெங்களூரூ மாநகரில் செய்ய வேண்டிய வளர்ச்சிப் பணிகளுக்கு உதவக்கூடிய விஷயங்களை அறிந்து கொள்ளவே டில்லி மேயருடன் ஆலோசனை நடத்தினேன். டில்லியில் திடக்கழிவு திடக்கழிவு மேலாண்மை மற்றும் பயோ காஸ் போன்றவை குறித்து ஓக்லா குப்பை கிடங்கை நேரில் பார்த்தேன்.பெங்களூரில், கழிவுகளிலிருந்து ஆற்றலை உற்பத்தி செய்வதில் நாங்கள் தோல்வியடைந்துவிட்டோம். இந்த விஷயத்தில் டில்லி சிறப்பாக செயல்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார். பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் உடன் வந்திருந்தனர் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை