உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / உயிருடன் இருப்பவரை இறந்து விட்டதாக பதிவு செய்து கோலார் நகராட்சி குளறுபடி

உயிருடன் இருப்பவரை இறந்து விட்டதாக பதிவு செய்து கோலார் நகராட்சி குளறுபடி

கோலார்: கோலார் நகராட்சியில் பகுதியில் வசித்து வருபவர் இறந்துவிட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவரது சகோதரர் அதிர்ச்சி அடைந்துள்ளார். கோலார் கட்டாரிபாளையாவில் வசித்து வருபவர் ரவிகுமார், 45. இவரின் சகோதரர் பிரகாஷ், 42, தனக்கு ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி விண்ணப்பித்திருந்தார். இதற்காக, அவர், ஆதார் கார்டு எண்ணை வைத்து, விபரங்களை அதிகாரிகள் பரிசீலித்தனர். குடும்பத்தினர் பற்றிய விபரங்கள் குறித்தும் ஆய்வு செய்தனர். இதில், பிரகாஷ் சகோதரர் ரவிகுமார் இறந்துவிட்டதாக பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த பிரகாஷ், கோலார் மாவட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரியிடம், 'என் சகோதரர் ரவிகுமார் உயிருடன் உள்ளார். அவர் இறந்துவிட்டதாக எப்படி பதிவாக முடியும்?' என கேட்டுள்ளார். இதற்கு மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரி, கோலார் நகராட்சி ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார். 'உயிருடன் இருக்கும் ரவிகுமார் இறந்துவிட்டதாக எப்படி பதிவு செய்யப்பட்டது? இதன் மீது விசாரணை நடத்தி விபரம் அளிக்க வேண்டும்' என்று ஆணையர் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, கோலார் நகராட்சி ஆணையர் நவீன் சந்திரா ஆய்வு செய்துள்ளார். அதில், ரவிகுமார் 2025 ஜனவரி 26ல் இறந்துவிட்டதாக பதிவாகி இருந்தது. இதை பதிவு செய்தது யார் என்பது குறித்து விசாரணை துவங்கி உள்ளது. 'இதேபோன்று உயிருடன் இருப்போரை இறந்துவிட்டதாக எத்தனை பேரை பதிவு செய்துள்ளனரோ?' என, பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை