உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ரூ.1 கூடுதலாக வசூலித்த கே.எஸ்.ஆர்.டி.சி., ரூ.30,001 நஷ்டஈடு வழங்க உத்தரவு

ரூ.1 கூடுதலாக வசூலித்த கே.எஸ்.ஆர்.டி.சி., ரூ.30,001 நஷ்டஈடு வழங்க உத்தரவு

மைசூரு: 'ஒரு ரூபாய் அதிகமாக டிக்கெட் கட்டணம் பெற்ற கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாகம், பயணிக்கு, 30,001 ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும்' என, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சாம்ராஜ் நகர் ஹூக்யா கிராமத்தை சேர்ந்தவர் கிரண் குமார். மைசூரில் வக்கீலாக உள்ளார். 2024 டிசம்பர் 31ல் கே.எஸ்.ஆர்.டி.சி., ஐராவத் பஸ்சில், மைசூரில் இருந்து பெங்களூருக்கு சென்றார்.அப்போது, '390 ரூபாய்க்கு டிக்கெட் கட்டணம் செலுத்த வேண்டும்' என, நடத்துநர் கூறினார். கிரண் குமாரும், 'யு.பி.ஐ.,' பரிவர்த்தனை மூலம் கட்டணத்தை செலுத்தினார். ஆனால், நடத்துநர் கொடுத்த டிக்கெட்டில், டிக்கெட் கட்டணம் 370 ரூபாய், ஜி.எஸ்.டி., 19 ரூபாய் என, மொத்தம் 389 ரூபாய் என்று இருந்தது.'எதற்காக 390 ரூபாய் கட்டணம் வசூலித்தார்?' என கோபமடைந்த கிரண் குமார், மைசூரு நுகர்வோர் நீதிமன்றத்தில், கே.எஸ்.ஆர்டி.சி., நிர்வாகத்தின் மீது வழக்கு தொடர்ந்தார்.அதில், 'கே.எஸ்.ஆர்.டி.சி., ஆடம்பர பஸ்சில் தினமும் 3.44 லட்சம் பேரும் மற்ற பஸ்களில், 35 லட்சம் பேரும் பயணம் செய்கின்றனர். ஆடம்பர பஸ்சில் மட்டும் மாதந்தோறும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பயணம் செய்கின்றனர். இது ஆண்டுக்கு 12 கோடியாகும்.இந்த பஸ்களில் பயணம் செய்யும் பயணியரிடம், கூடுதலாக ஒரு ரூபாய் வசூலிப்பதன் மூலம், கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாகம் ஆண்டுக்கு, 12.39 கோடி ரூபாய் ஈட்டுகிறது. மேலும், யு.பி.ஐ., நடைமுறை அமலுக்கு வந்த பின், சில்லறை தட்டுப்பாடு இல்லை. அவ்வாறு இருக்கும்போது, கூடுதலாக ஒரு ரூபாய் கட்டணம் வசூலிப்பது எந்த வகையில் நியாயம்? இதன் மூலம் பயணியருக்கு போக்குவரத்து நிர்வாகம் அநீதி இழைக்கிறது' என குறிப்பிட்டிருந்தார்.வழக்கை விசாரித்த நீதிமன்றமும், 'புகார்தாரருக்கு 25,000 ரூபாய் நஷ்டஈடும், கூடுதலாக நீதிமன்ற செலவு 5,000 ரூபாய், அவரிடம் வசூலிக்கப்பட்ட ஒரு ரூபாய் என, 30,001 ரூபாய் நஷ்டஈட்டை, ஒரு மாதத்துக்குள் கே.எஸ்.ஆர்.டி.சி., வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை