உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பா.ஜ., - எம்.எல்.ஏ., அபய் பாட்டீல் மீது லோக் ஆயுக்தா போலீசார் வழக்கு பதிவு

பா.ஜ., - எம்.எல்.ஏ., அபய் பாட்டீல் மீது லோக் ஆயுக்தா போலீசார் வழக்கு பதிவு

பெலகாவி: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பெலகாவி தெற்கு பா.ஜ., - எம்.எல்.ஏ., அபய் பாட்டீல் மீது லோக் ஆயுக்தா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இதுகுறித்து லோக் ஆயுக்தா எஸ்.பி., ஹனுமந்தராயா கூறுகையில், ''வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில், எம்.எல்.ஏ., அஜய் பாட்டீல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.இதன் பின், எம்.எல்.ஏ., மீது புகார் அளித்திருந்த, சமூக ஆர்வலர் சுஜில் முல்கட், பெலகாவியில் அளித்த பேட்டி:ஊழல், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தவர், எம்.எல்.ஏ., அபய் பாட்டீல். இதன் மூலம் கிடைத்த பணத்தில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து உள்ளார். இது தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யும்படி கடந்த 2012 முதல் போராடி வருகிறேன்.லோக் ஆயுக்தா போலீசாரிடம் பல முறை ஆவணங்களை சமர்ப்பித்துள்ளேன். இதை பார்த்து அச்சமடைந்த அபய் பாட்டீல், தன் மீது வழக்குப்பதிவு செய்யக்கூடாது என உயர் நீதிமன்றத்தை நாடினார். ஆனால், அவர் மீது வழக்குப் பதிய தடை விதித்தது.எனவே, கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தேன். உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் லோக் ஆயுக்தா அதிகாரிகளிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, அபய் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.லோக் ஆயுக்தா போலீசார் மீதான நம்பகத்தன்மை பறி போய்விட்டது. எம்.எல்.ஏ., ஆதரவாளர்களிடமிருந்து எனக்கு மிரட்டல்கள் வருகின்றன. வழக்கை ரத்து செய்யக்கோரி, பாட்டீலின் நெருங்கிய நண்பரும், வழக்கறிஞருமான ஒருவர், எனக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். இது தொடர்பான ஆடியோ என்னிடம் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை