மேலும் செய்திகள்
35 குவின்டால் அன்னபாக்யா அரிசி மீட்பு
21 hour(s) ago
மாயமான கடற்படை மாலுமி பாக்.,குடன் தொடர்பில் உள்ளாரா?
21 hour(s) ago
இணையதளம் துவங்க அமைச்சரவை துணை குழு முடிவு
21 hour(s) ago
கலபுரகி: கர்நாடகாவில் 101 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டதாக மாநில அரசு அறிவித்தது. இதில், கலபுரகி மாவட்டம் சேடம் தாலுகாவின் பெயர் இடம்பெறவில்லை. இதை கண்டித்து கலபுரகி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர். அப்போது, அவ்வழியாக சென்ற இளைஞரின் ஸ்கூட்டரை, பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., ராஜ்குமார் பாட்டீல் தெல்கூர் வழிமறித்து நிறுத்தினார். 'இங்கு போராட்டம் நடக்கும் போது ஸ்கூட்டரில் செல்கிறாயா நீ. உனக்கு என்ன துணிச்சல்' இருக்கும் என ஆவேசமாக பேசினார். இளைஞர் அணிந்திருந்த ஹெல்மெட்டை வலுக்கட்டாயமாக கழற்றி, தரையில் போட்டு உடைத்தார். டயரில் காற்றை இறக்கி விட்டார். மேலும், அந்த இளைஞரை அடிக்க சென்றார். அப்போது, போலீசார் தலையிட்டு இளைஞரை பத்திரமாக வழியனுப்பி வைத்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 'பொது இடத்தில் போராட்டம் நடத்திவிட்டு, சாலையில் செல்பவரை தாக்கும் அளவுக்கு அதிகாரத்தை ராஜ்குமாருக்கு யார் கொடுத்தது. முன்னாள் எம்.எல்.ஏ.,வாக இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா. அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும்' என பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்தனர்.
21 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago