மேலும் செய்திகள்
அறுசுவை: சிப்பி காளான் குழம்பு
04-Oct-2025
சிக்கஜாலா: பூஜை நடத்திய நேரத்தில், வீட்டில் அசைவ உணவு சாப்பிட்ட செங்கல் சூளை தொழிலாளியை, கம்பியால் அடித்து கொன்ற நண்பர் கைது செய்யப்பட்டார். அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜேஷ், 40. பீஹாரை சேர்ந்தவர் சம்பு, 43. இவர்கள் இருவரும் பெங்களூரு சிக்கஜாலாவில் வாடகை வீட்டில் வசித்தனர். செங்கல் சூளையில் தொழிலாளர்களாக வேலை செய்தனர். தீபாவளிக்கு பின் வரும் சத் பூஜையை ஒட்டி, கடந்த சில தினங்களாக சம்பு வீட்டிலேயே பூஜை செய்தார். வீட்டில் வைத்து அசைவ உணவு சாப்பிட கூடாது என்று, ராஜேஷிடம் கூறி இருந்தார். நேற்று முன்தினம் இரவு சம்பு வீட்டில் பூஜை செய்து கொண்டு இருந்தார். அப்போது ஹோட்டலுக்கு சென்ற ராஜேஷ், அசைவ உணவு வாங்கி வந்து வீட்டில் சாப்பிட்டார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. கோபம் அடைந்த சம்பு, வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் ராஜேஷை தாக்கினார். தலையில் பலத்த காயம் அடைந்தவர் பரிதாபமாக இறந்தார். சம்புவை, சிக்கஜாலா போலீசார் கைது செய்தனர்.
04-Oct-2025