உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ரூ.31 கோடி வரி பாக்கி மந்திரி மாலுக்கு சீல்

 ரூ.31 கோடி வரி பாக்கி மந்திரி மாலுக்கு சீல்

மல்லேஸ்வரம்: மாநகராட்சிக்கு 31 கோடி ரூபாய் சொத்து வரி பாக்கி வைத்த, மல்லேஸ்வரம், 'மந்திரி' மாலுக்கு, ஜி.பி.ஏ., அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்திற்கு உட்பட்ட சென்ட்ரல் மாநகராட்சி பகுதிகளில் உள்ள கட்டடங்களின் உரிமையாளர்கள் சொத்து வரி பாக்கி வைத்திருந்தனர். இதை வசூலிக்கும்படி அதிகாரிகளுக்கு, கமிஷனர் ராஜேந்திர சோழன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி சொத்து வரி பாக்கி வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி அதிகாரிகள், பாக்கியை வசூலித்து வருகின்றனர். இந்நிலையில் மல்லேஸ்வரம் சம்பிகே ரோடு பகுதியில் உள்ள, பிரபல, 'மந்திரி' மால் 30.81 கோடி ரூபாய் சொத்து வரி பாக்கி வைத்துள்ளது. பல முறை நோட்டீஸ் அனுப்பியும், மால் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இதனால் நேற்று காலை மாலுக்கு சென்ற, ஜி.பி.ஏ., அதிகாரிகள், மாலின் நுழைவுவாயில் கதவை அடைத்து 'சீல்' வைத்தனர். இதற்கு முன்பும், சொத்து வரி செலுத்தாததால், மந்திரி மாலுக்கு 'சீல்' வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ