உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மைசூரில் இன்று மாரத்தான்

மைசூரில் இன்று மாரத்தான்

மைசூரு: தசராவையொட்டி மைசூரில் இன்று 5 கி.மீ., துாரத்திற்கு மாரத்தான் போட்டி நடக்கிறது. மைசூரு தசராவின் ஒரு பகுதியாக, கர்நாடக அரசின் விளையாட்டு துறை சார்பில், இன்று மாரத்தான் போட்டி நடக்கிறது. இன்று காலை 6:30 மணிக்கு சாமுண்டி விஹார் மைதானத்தில் இருந்து துவங்கும் மாரத்தான், பழைய கலெக்டர் அலுவலகத்தில் முடிகிறது. 5 கி.மீ., துாரத்திற்கு நடக்கும் மாரத்தான் இரண்டு பிரிவுகளில் நடக்கிறது. ஒரு பிரிவில் 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்களும்; இன்னொரு பிரிவில் 45 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்களும் பங்கேற்க உள்ளனர். முதலில் வருவோருக்கு 10,000 ரூபாய்; இரண்டாம் இடத்துக்கு 7,000 ரூபாய்; மூன்றாவது இடத்திற்கு 5,000 ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்படுகிறது. மாரத்தானில் 2,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளதாக, விளையாட்டு துறை கமிஷனர் சேத்தன் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ