உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  எம்.இ.எஸ்., தலைவர்கள் கைது பஸ் போக்குவரத்து திடீர் நிறுத்தம்

 எம்.இ.எஸ்., தலைவர்கள் கைது பஸ் போக்குவரத்து திடீர் நிறுத்தம்

பெலகாவி: பெலகாவியில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்த எதிர்ப்பு தெரிவித்து, 'மஹாமேளா' என்ற பெயரில் பிரமாண்ட கூட்டம் நடத்த நினைத்திருந்த, எம்.இ.எஸ்., தலைவர்கள், தொண்டர்களை வீட்டு வாசலில் போலீசார் கைது செய்தனர். கர்நாடகாவின் பெலகாவி, பீதர், கலபுரகி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 150 க்கும் மேற்பட்ட கிராமங்கள், மஹாராஷ்டிரா மாநில எல்லையை ஒட்டி வருகிறது. இங்கு மராத்தி மொழி பேசுவோர் அதிகம் வசிக்கின்றனர். குறிப்பாக பெலகாவியை தங்களுடையது என்று, மஹாராஷ்டிரா சொந்தம் கொண்டாடுகிற து. பெலகாவி எங்களுடையது என்று கூறும் வகையில், கடந்த 2006 ல் குமாரசாமி முதல்வராக இருந்த போது, பெலகாவியில் சுவர்ண விதான் சவுதா கட்டப்பட்டது. ஆண்டுதோறும் டிசம்பரில் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் அங்கு நடத்தப்படுகிறது. இதற்கு எம்.இ.எஸ்., எனும் மஹாராஷ்டிரா ஏகிகிரண் சமிதி, சிவசேனா எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இந்நிலையில் நேற்று பெலகாவியில் கூட்டத்தொடர் துவங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெலகாவி அருகே திலக்வாடியில், மஹாமேளா எனும் பிரமாண்ட கூட்டம் நடத்த எம்.இ.எஸ்., அனுமதி கேட்டது. மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது. ஆனாலும் போராட்டத்திற் கு எம்.இ.எஸ்., தலைவர்கள், தொண்டர்கள் தயாராகி வந்தனர். இதுபற்றி அறிந்த போலீசார் நேற்று காலையில் எம்.இ.எஸ்., தலைவர்கள், தொண்டர்களை அவர்களது வீட்டு வாசலி லேயே கைது செய்தனர். இதனை கண்டித்து மஹாராஷ்டிராவின் கோலாப்பூரில் சிவசேனா கட்சியினர் போராட்டம் நடத்தினர். அங்கு வந்த கர்நாடக அரசு பஸ் மீது கருப்பு மையால் 'ஜெய் மஹாராஷ்டிரா' என்று எழுதினர். நிலைமை விபரீதம் ஆனதை உணர்ந்த, கர்நாடக போக்குவரத்து கழக அதிகாரிகள், வடமாவட்டங்களில் இருந்து மஹாராஷ்டிராவுக்கு செல்லும் பஸ் போக்குவரத்தை நிறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி