உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் கட்சி தாவல்? இளைஞர் அணி தலைவர் நிகில் மறுப்பு!

ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் கட்சி தாவல்? இளைஞர் அணி தலைவர் நிகில் மறுப்பு!

யாத்கிர் : ''ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் யாரும் காங்கிரசில் சேரப்போவதில்லை. காங்கிரஸ் முதலில் தன் கட்சி எம்.எல்.ஏ.,க்களை தக்க வைத்து கொள்ளட்டும்,'' என ம.ஜ.த., மாநில இளைஞர் அணி தலைவர் நிகில் குமாரசாமி தெரிவித்தார்.யாத்கிரில் நடந்த ம.ஜ.த., உறுப்பினர் சேர்க்கை பிரசாரத்தில், நிகில் பேசியதாவது:ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் போன்றவர்கள். இவர்கள் அனைவரும் எங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகின்றனர். ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் யாரும் காங்கிரசில் சேரப்போவதில்லை. தன் அதிகார நாற்காலியை தக்க வைத்து கொள்ள, காங்கிரஸ் முதலில் தன் கட்சி எம்.எல்.ஏ.,க்களை தக்க வைத்து கொள்ளட்டும். இரு தேசிய கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள், ம.ஜ.த.,வில் இருந்து வெளியேறியவர்கள்.பல வழக்குகளை எதிர்கொண்டு கட்சி தொண்டர்களுக்கு தைரியம் அளித்தவர்கள் சதாசிவ ரெட்டி, நாகனகவுடா கண்டகுரா. 2018ல் நாகனகவுடா கண்டகுரா முதன் முறையாக எம்.எல்.ஏ., ஆனார். சரணகவுடா கண்டகுரா, மத்திய அமைச்சர் குமாரசாமியின் மகன் போன்றவர்.ம.ஜ.த., இளைஞர் அணி தலைவராக இருந்த மது பங்காரப்பா, கட்சியை விட்டு வெளியேறினார். அதன்பின், சரணகவுடா கண்டகுராவை அழைத்து, மாநில இளைஞர் அணி தலைவர் பதவி வழங்க, கட்சியின் தேசிய தலைவர் தேவகவுடா விரும்பினார்.அதற்கு சரணகவுடா கண்டகுரா, 'அடுத்து வரும் பொது தேர்தலில் போட்டியிட வேண்டி உள்ளது. எனது தந்தை எம்.எல்.ஏ.,வாக உள்ளார். தொகுதி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். எனவே, எனக்கு தலைவர் பதவி வேண்டாம்' என்று கூறி, என் பெயரை பரிந்துரைத்தார். அவரின் பரிந்துரைப்படி, பெங்களூரு ஜெ.பி., பவனில் என்னை மாநில இளைஞர் அணி தலைவராக்கினார்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை