உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பாம்பு கடித்து தாய், மகன் பலி

பாம்பு கடித்து தாய், மகன் பலி

ராய்ச்சூர்: பாம்பு கடித்து தாய், மகன் உயிரிழந்தனர்.ராய்ச்சூர் மாவட்டம், ஹைருண்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பம்மா, 35. இவருக்கு கணவரும், மகன் பசவராஜ், 10, உட்பட இரு பிள்ளைகளும் இருந்தனர். ஜூன் 28ம் தேதி இரவில், சுப்பம்மாவுக்கும், பசவராஜுக்கும் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.இதை பார்த்த கணவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதற்குள், மகன் பசவராஜ் இறந்துவிட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுப்பம்மாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.நன்றாக இருந்தவர்கள் திடீரென இறந்ததற்கான காரணம் தெரியாமல் குடும்பத்தினர் தவித்தனர். இருவரின் கால்களிலும் பாம்பு கடித்த தடயம் இருந்ததை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இரவில் துாங்கிக் கொண்டிருந்தபோது, பாம்பு கடித்தது இருவருக்கும் தெரியவில்லை.தேவதுர்கா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை