உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மின் கசிவால் தீ விபத்து தாய், மகன் உயிரிழப்பு

மின் கசிவால் தீ விபத்து தாய், மகன் உயிரிழப்பு

தாவணகெரே : மின் கசிவால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு தாயும், மகனும் உயிரிழந்தனர்.தாவணகெரே மாவட்டம், கைபேட்டையை சேர்ந்தவர் விமலா, 75, இவரது மகன் குமார், 35, உட்பட வீட்டில் ஆறு பேர் வசித்து வந்தனர். நேற்று அதிகாலை வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது.சிறிது நேரத்தில் வீடு முழுதும் அடர்த்தியான புகை சூழ்ந்தது. வீட்டில் இருந்தோர் மூச்சுத் திணறினர். இதில் நான்கு பேர் வீட்டிலிருந்து வெளியேறினர். ஆனால், அறை பூட்டப்பட்டிருந்ததால் விமலா, குமார் ஆகியோரால் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர்.தகவல் அறிந்த தீயணைப்புப் படையினர் அங்கு சென்றனர். வீட்டின் அறையில் மயங்கிய நிலையில் இருந்த தாயையும், மகனையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.தீ விபத்தில் வீட்டில் இருந்த மரச்சாமான்கள், எலக்ட்ரானிக் உட்பட மற்ற பொருட்கள் எரிந்தன. தீயணைப்பு படையினர் கூறுகையில், 'மீன் தொட்டிக்கு கொடுக்கப்பட்ட மின் இணைப்பில் மின் கசிவு ஏற்பட்டதால், தீ விபத்து நடந்துள்ளது' என்றனர்.இவர்கள், பா.ஜ., தலைவர் ருத்ரமுனி சுவாமியின் உறவினர்களாவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !