உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மைசூரு மண்டல வன அதிகாரி மர்ம மரணம்

 மைசூரு மண்டல வன அதிகாரி மர்ம மரணம்

மைசூரு: மைசூரு புறநகர் பஸ் நிலையம் அருகில் மைசூரு மண்டல வன அதிகாரி, மர்மமான முறையில் இறந்து கிடந்தார். விஜயபுரா மாவட்டத்தை சேர்ந்தவர் காந்தராஜ் சவான், 35. மைசூரு டி.நரசிபுரா மண்டல வன அதிகாரியாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு, தனது நண்பர் மானுவை மொபைல் போனில் தொடர்பு கொண்ட இவர், மைசூரு புறநகர் பஸ் நிலையம் அருகில் மதர் தெரசா சாலையில் உள்ள லாட்ஜ் ஒன்றில் பார்ட்டிக்கு அழைத்திருந்தார். இருவரும் குடித்து விட்டு, சிறிது நேரம் வெளியே நடந்து சென்று விட்டு, மீண்டும் லாட்ஜில் தங்கினர். நேற்று காலையில் கண் விழித்த மானு, காந்தராஜ் இல்லாததால், லாட்ஜில் உள்ள ஊழியர்களிடம் கேட்டார். வெளியே சென்றதாக கூறிய தகவலை அடுத்து, வெளியே சென்று தேடினார். அப்போது, புறநகர் பஸ் நிலையம் அருகில் சாலை ஒன்றில் அவர் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக லஸ்கர் போலீஸ் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த போலீசார், ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை