மைசூரு தமிழ் சங்கம் 6ல் முப்பெரும் விழா
மைசூரு: மைசூரு மாவட்டத்தில் 10 மற்றும் பி.யு.சி., இரண்டாம் ஆண்டு பயின்ற தமிழ் குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு மைசூரு தமிழ்ச்சங்கம் சார்பில் பரிசு வழங்கும் விழா தமிழர் பண்பாடு, கலாசாரம், சிறு, குறு தொழில் முனைவோர் பங்களிப்பு என முப்பெரும் விழாவாக வரும் 6ம் தேதி கொண்டாடப்படுகிறது.மைசூரு ரிங் ரோட்டில் உள்ள பைதிவே ஹோட்டலில் அன்று காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை முப்பெரும் விழா நடக்கிறது.சாம்ராஜ்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.எல்.சாகர், திருப்பூர் தமிழ் இலக்கிய சங்க தலைவர் அனிதா கு.கிருஷ்ணமூர்த்தி, குளோபல் டிஜிட்டல் பிசினஸ் டெவலப்மென்ட் தலைவர் வி.ராம்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.கலாசார விழாவில் தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், ஆண்கள் வேட்டி, சட்டையுடனும், பெண்கள் சேலை என பாரம்பரிய உடையுடன் வர வேண்டும்.தமிழர்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில், கலை நிகழ்ச்சிகளும், விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. சிறு, குறு தொழில் செய்வோர் தங்கள் பொருட்களை விற்பனை செய்து கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.இதில், ஹெச்.டி., கோட்டே, ஹுன்சூர், குண்டல்பேட், சாம்ராஜ்நகர் ஜில்லா, ஹனுார், கொள்ளேகால், தென் கன்னட சேவா - சுள்ளியா, குஷால் நகர், குடகு ஜில்லா காவேரி - சித்தாபுரா, கோனிகொப்பா தமிழ்ச்சங்க நிர்வாகிகளும் கலந்து கொள்கின்றனர்.மேலும் விபரங்களுக்கு, மைசூர் தமிழ்ச்சங்கம் பொதுச் செயலர் வெ.ரகுபதியை 96322 47399 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.