உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கருக்கலைப்பு தடுக்க புதிய செயலி

கருக்கலைப்பு தடுக்க புதிய செயலி

பெங்களூரு: பெங்களூரில் பெண் குழந்தைகளை கருக்கலைப்பு செய்வதை தடுக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மாநகராட்சியின் சுகாதாரப்பிரிவு, 'சேவ் மாம்' எனும் திட்டத்தில் புதிய நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறது. இதன்படி, பெங்களூரில் உள்ள கர்ப்பிணியரின் எண்ணிக்கை, அவர்களின் வீட்டு முகவரி குறித்த அனைத்து விபரங்களையும் சேகரிப்பதற்காக செயலி உருவாக்கப்பட உள்ளது. இந்த செயலியில், அரசு, தனியார் மருத்துவமனைகளில் பிரசவம் தொடர்பான சிகிச்சைக்கு வருவோரின் விபரம் சேகரிக்கப்படும். இதன் மூலம் கர்ப்பிணியர் கண்காணிக்கப்படுவர். கர்ப்பிணியரின் வீடுகளுக்கு ஆஷா பணியாளர்கள் நேரில் சென்று விசாரிப்பர். குழந்தை பிறந்து 2 வயதாகும் வரை கண்காணிக்கப்படுவர். இத்திட்டம் மூலம் கருக்கலைப்பு நடப்பதை தடுப்பதுடன், கர்ப்பிணியர், கைக்குழந்தைகளின் நலன் பாதுகாக்கப்படும் என, சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ