காஷ்மீர் பிரச்னையில் யார் தலையீடும் இல்லை
பெங்களூரு : ''காஷ்மீர் பிரச்னையில் மூன்றாம் நாட்டின் தலையீடு இல்லை,'' என, மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி கூறினார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:காஷ்மீர் பிரச்னையில் மூன்றாம் நாட்டின் தலையீடு இல்லை. மத்தியஸ்தத்திற்கு இந்தியா ஒரு போதும் ஒப்புக் கொண்டதில்லை. அதற்கு வாய்ப்பும் ஏற்படவில்லை. பிரதமர் மோடியும் இதை தெளிவுபடுத்தி உள்ளார்.தேசிய நலன் சார்ந்த விஷயங்களில் பிரதமர் ஒரு போதும் சமரசம் செய்து கொண்டதில்லை. தேசிய பாதுகாப்பு குறித்த விஷயத்தில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.நம்மை தாக்கிய பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது. அந்த நாட்டை அழிக்க போர் அவசியம் என்ற கருத்து நிலவுகிறது. பாகிஸ்தான் தற்போது விழித்துக் கொள்ளவில்லை என்றால், வரும் காலத்தில் முற்றிலுமாக அழிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.