| ADDED : ஆக 26, 2026 11:26 PM
தார்வாட்: வீடு ஒன்றில் காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில், ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தார்வாடின், ஜன்னத் நகரில் வசிப்பவர் ராஜாசாப் நீரலகட்டி, 35. இவர் நேற்று காலை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அப்போது வீட்டில் இருந்த காஸ் சிலிண்டரில், கசிவு ஏற்பட்டது. இதை அவர் கவனிக்கவில்லை. இதன் விளைவாக வீடு முழுதும் பரவியது. காஸ் பரவியது தெரியாமல், அவர் லைட்டை ஆன் செய்த போது, காஸ் சிலிண்டர் பெரும் சத்தத்துடன் வெடித்து சிதறியது. வீட்டில் தீப்பிடித்தது. இதில். அவரால் வெளியே வர முடியாமல் பரிதவித்தார். அவரது வீட்டில் இருந்த பொருட்கள், சிதறி வீதியில் விழுந்தன. சம்பவத்தை கண்ட அப்பகுதியினர், தீயை பொருட்படுத்தாமல், உள்ளே சென்று காயங்களுடன் விழுந்து இடந்த ராஜாசாப் நீரலகட்டியை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். சிலிண்டர் வெடித்து சிதறிய காட்சி, வீட்டின் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து, வித்யாகிரி போலீஸ் நிலையத்தில், வழக்கு பதிவாகியுள்ளது.