மேலும் செய்திகள்
இளைஞர்களின் சிந்தனை புத்தொழிலாக உருவாகும்
13-Oct-2025
பெங்களூரு: ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி துறை சார்பில் நடந்த, 'இளைஞர் பாராளுமன்றம்' போட்டியில், பெங்களூரு தெற்கு மாவட்டத்தை சேர்ந்த மாணவி முதலிடம் பிடித்தார். பெங்களூரில் நேற்று ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி துறை சார்பில் 'இளைஞர் பாராளுமன்றம்' போட்டி நடந்தது. இதில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பி.யு., கல்லுாரிகளை சேர்ந்த 64 மாணவ - மாணவியர் பங்கேற்றனர். இவர்களுக்கு பிரதமர், சபாநாயகர், ஆளுங்கட்சி உறுப்பினர்கள், எதிர்க்கட்சியினர் என பொறுப்புகள் வழங்கப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்விகள், துணை கேள்விகள் மூலம் ஆளும் கட்சியை விமர்சித்தனர். இதில், 'ஒரே நாடு, ஒரே தேர்தல், 'நாட்டில் முறையற்ற நிதி வினியோகம், மணிப்பூரில் பெண்களின் ஆடைகளை அவிழ்க்கும் செயல்' போன்ற பல கவனத்தை ஈர்க்கும் பிரச்னைகள் குறித்து கேள்விகள் எழுப்பி, கவனத்தை ஈர்த்தனர். சிறிது நேரம், உண்மையான லோக்சபாவில் ஏற்படும் கூச்சல், குழப்பத்தை இங்கும் காண முடிந்தது. அப்போது அனைவரும் அமைதியாக இருக்கும்படி லோக்சபா தலைவர் கேட்க, அதை காதில் வாங்காதபடி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். போட்டியை காண வந்த பெற்றோர் பலர், தங்களின் பிள்ளைகள் செயலை கண்டு ஆச்சரியமடைந்தனர். சிலர், தங்கள் பிள்ளைகள் பேச வாய்ப்பு தராதது குறித்து அதிருப்தியும் தெரிவித்தனர். இப்போட்டியில், பெங்களூரு தெற்கு மாவட்டத்தை சேர்ந்த பிரதிமா முதலிடமும், சிக்கமகளூரு மாவட்டத்தின் இஷானா இரண்டாவது; ஹாசனை சேர்ந்த ஷானியா மூன்றாவது; ராம்நகரை சேர்ந்த ராவிகுமார் நான்காவது இடமும் பெற்றனர்.
13-Oct-2025