உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 1,154 ஸ்பா, மசாஜ் சென்டர்களில் போலீசார் அதிரடி சோதனை

1,154 ஸ்பா, மசாஜ் சென்டர்களில் போலீசார் அதிரடி சோதனை

பெங்களூரு: பெங்களூரில், 1,154 ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில், போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். பெங்களூரில் ஐந்து போலீஸ் கமிஷனர் அலுவலகங்கள் உருவாக்கப்பட்டதை தொடர்ந்து, சட்டம் – ஒழுங்கு பிரச்னையை சரியாக கையாள வேண்டும் என போலீஸ் கமிஷனர்களுக்கு, அரசு உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில், பெங்களூரில் நேற்று ஒரே நாளில் 1,154 ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்கள் மீது போலீசார் சோதனை நடத்தினர். கண்காணிப்பு கேமராக்கள் சரியாக பொருத்தப்பட்டு உள்ளதா; பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறதா; வருகை பதிவேடு சரியாக பராமரிக்கப்படுகிறதா; உரிமம் சரியாக உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டது. இதில், நுாற்றுக்கும் மேற்பட்ட ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்கள், தங்கள் உரிமத்தை புதுப்பிக்காமலும், சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமலும் இருப்பது தெரிந்தது. அதன் உரிமையாளர்கள், ஊழியர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ