உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ரூ.10 கோடி நகை கொள்ளையரை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறல்

 ரூ.10 கோடி நகை கொள்ளையரை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறல்

மைசூரு: ஹுன்சூர் ஜூவல்லரியில், 10 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்ற, கொள்ளையர்களை கண்டுபிடிப்பதில் போலீசுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது . மைசூரு மாவட்டம் ஹுன்சூர் டவுனில் உள்ள, 'ஸ்கை கோல்டு அண்டு டைமண்ட்' ஜூவல்லரிக்குள் கடந்த, 28ம் தேதி புகுந்த ஐந்து கொள்ளையர்கள், துப்பாக்கி முனையில் கடை ஊழியர்களை மிரட்டி, பத்து கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்து சென்றனர். கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்கள் ஐந்து பேரின் முகமும் பதிவாகி இருந்தது. இதனால், இவ்வழக்கை போலீசார் விரைவில் தீர்ப்பர் என்ற நம்பிக்கை, நகைக்கடை உரிமையாளருக்கு இருந்தது. ஆனால், கொள்ளையர்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அதாவது கொள்ளையர்கள் யாரும் மொபைல் போன் பயன்படுத்தவில்லை. மொபைல் போன் பயன்படுத்தினால், மொபைல் டவர் அடிப்படையில் சிக்கி கொள்வோம் என்று யோசித்து, கொள்ளை திட்டத்தை அரங்கேற்றி உள்ளனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மட்டுமே, போலீசாருக்கு ஒரே ஆதாரமாக உள்ளன. இதை வைத்து தான் கொள்ளையர்களை கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. சம்பவம் நடந்து மூன்று நாட்களாகியும் கொள்ளையர்கள் பற்றி, போலீசாருக்கு இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை