உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பிரபல மகப்பேறு டாக்டரும் அவரது மகனும் தற்கொலை

 பிரபல மகப்பேறு டாக்டரும் அவரது மகனும் தற்கொலை

ஷிவமொக்கா: பிரபல மகப்பேறு மருத்துவரும், அவரது மகனும் தற்கொலை செய்து கொண்டனர். தாவணகெரே மாவட்டம், நியாமதியை சேர்ந்தவர் டாக்டர் நாகராஜ் ஹொம்மரடி, 62. இவரது மனைவி டாக்டர் ஜெயஸ்ரீ, 57. இவர், பிரபல மகப்பேறு மருத்துவர். இவர்களின் மகன் ஆகாஷ் ஹொம்மரடி, 32. இவர்களின் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக ஷிவமொக்கா காந்தி நகரில் வசிக்கின்றனர். அங்கு சொந்தமாக மகப்பேறு மருத்துவமனையும் நடத்துகின்றனர். குழந்தைகள் நல நிபுணரான டாக்டர் நாகராஜ் ஹொம்மரடி, 10 ஆண்டுக்கு முன், என்ன காரணாத்தாலோ தற்கொலை செய்து கொண்டார். அவரது மகன் ஆகாஷ் ஹொம்மரடியின் மனைவி நவ்யஸ்ரீயும், ஒன்றரை ஆண்டுக்கு முன், அதே வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் ஜெயஸ்ரீயையும், ஆகாஷையும் அதிகம் பாதித்தது. இந்த பாதிப்பில் இருந்து மகனை மீட்கும் நோக்கில், ஆறு மாதங்களுக்கு முன், வேறு பெண்ணை ஜெயஸ்ரீ மறுமணம் செய்து வைத்தார். இந்நிலையில், நேற்று காலையில் மருமகள் வேறு அறையில் இருந்தார். அப்போது ஜெயஸ்ரீயும், அவரது மகன் ஆகாஷும் அவரவர் அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். சிறிது நேரத்துக்கு பின், இதை கவனித்த மருமகள், கவனித்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த வினோபா நகர் போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இருவரின் உடல்களையும் மீட்டனர். அறையில் சோதனை நடத்திய போது கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், நவ்யஸ்ரீயின் தற்கொலையால், மனம் நொந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலைக்கு முன் அனைத்து சொத்துகளையும், இரண்டாவது மருமகள் பெயரில் எழுதியுள்ளனர். இது குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். தாய், மகனின் தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்பது, விசாரணையின் பின் தெரியும் என்று போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ