மேலும் செய்திகள்
மகள்கள் பலாத்காரம் தந்தை கைது
16 minutes ago
இன்று இனிதாக: பெங்களூரு
17 minutes ago
பிரபல மகப்பேறு டாக்டரும் அவரது மகனும் தற்கொலை
17 minutes ago
ராட்வீலர் நாய்கள் கடித்து பெண் பலி
17 minutes ago
பெங்களூரு: ஜி.பி.ஏ., அமைப்பு, ஐந்து மாநகராட்சிகளாக பிரிக்கப்பட்டது மற்றும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தியது போன்ற காரணங்களால், சொத்து வரி வசூலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பெங்களூரு மாநகராட்சியாக இருந்த போது, 2025 - 26ம் ஆண்டு 6,700 கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஏப்ரல் முதல் செப்டம்பர் முதல் வாரம் வரை, 3,259 கோடி ரூபாய் சொத்து வரி வசூலாகியிருந்தது. அதன்பின், ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் அமைக்கப்பட்டது; ஐந்து புதிய மாநகராட்சிகள் அமைக்கப்பட்டன. புதிய ஜி.பி.ஏ., மற்றும் ஐந்து மாநகராட்சிகள் அமைந்த பின், வரி வசூலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஜி.பி.ஏ., நிர்வாகம் அமலுக்கு வந்த மூன்று மாதங்களில் வெறும் 325.75 கோடி ரூபாய் மட்டுமே வசூலாகியுள்ளது. பெங்களூரு மாநகராட்சியாக இருந்த போது, 2024 நவம்பர் இறுதி வரை, 4,298 கோடி ரூபாய் வரி வசூலானது. 2025ன் நவம்பர் இறுதி வரை, 3,585 கோடி ரூபாய் வசூலாகி இருந்தது. கடந்தாண்டுடன் ஒப்பிட்டால் இம்முறை, 16 சதவீதம் வரி குறைந்துள்ளது. இதுகுறித்து ஜி.பி.ஏ., வருவாய் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: ஜி.பி.ஏ., அமைக்கப்பட்டது, ஐந்து மாநகராட்சிகள் பிரிக்கப்பட்டது, மாநில அரசு நடத்திய ஜாதி வாரி கணக்கெடுப்பு போன்றவையே சொத்து வரி வசூல் குறைய முக்கிய காரணமாகும். செப்டம்பரில் அதிகாரிகள், ஊழியர்கள் ஐந்து மாநகராட்சிகளாக பிரிக்கும் பணிகளில் ஈடுபட்டனர். அக்டோபரில் ஜாதி வாரி கணக்கெடுப்பு பணியில் அதிகாரிகள், ஊழியர்கள் நியமிக்கப்பட்டதால், இரண்டு மாதங்கள் சொத்து வரி வசூலிக்க முடியவில்லை. நவம்பர் மாதம், இ - பட்டா மனுக்களை கவனிக்கும் பணிகள் முடிக்கப்பட்டன. எனவே வரி வசூலிக்க முடியவில்லை. வரும் நாட்களில் வரி வசூலிக்க நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
16 minutes ago
17 minutes ago
17 minutes ago
17 minutes ago