உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / காங்., பிரமுகரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு

காங்., பிரமுகரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு

மாண்டியா: பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படும் வகையில், நெடுஞ்சாலையில் பிறந்த நாள் கொண்டாடிய, காங்கிரஸ் பிரமுகரின் செயல், சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. மாண்டியா நகரில் வசிப்பவர் கிரிஷ். இவர் ஆளுங்கட்சி காங்கிரஸ் பிரமுகராவார். நேற்று முன்தினம் இவருக்கு பிறந்த நாள். இதை தன் வீட்டுக்குள் கொண்டாடுவதற்கு பதில், பெங்களூரு – மைசூரு நெடுஞ்சாலையில், கோலாகலமாக கொண்டாடினார். மாண்டியாவின் முக்கியமான இடமான, சஞ்சய் சதுக்கம் அருகில் உள்ள நெடுஞ்சாலை ஓரத்தில், பந்தல் போட்டு, கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார். இதனால் பொதுமக்களின் நடமாட்டத்துக்கும், வாகன போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டது. பலரும் காங்கிரஸ் பிரமுகரின் செயலை கண்டித்துள்ளனர். பா.ஜ.,வும் இதை கண்டித்துள்ளது. ' ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை என்கிறீர்கள். ஆனால், பொதுமக்கள் பயன்படுத்தும் நெடுஞ்சாலையில், பந்தல் போட்டு பிறந்த நாள் கொண்டாட, உள்துறை அமைச்சர் அனுமதி அளித்தாரா. அல்லது நகராட்சி, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்ததா' என, பா.ஜ., கேள்வி எழுப்பியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி