உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / அதிகாரிகளுடன் ஆலோசனை? சுர்ஜேவாலா மீது ராஜண்ணா அதிருப்தி

அதிகாரிகளுடன் ஆலோசனை? சுர்ஜேவாலா மீது ராஜண்ணா அதிருப்தி

பெங்களூரு: கர்நாடக அரசு அதிகாரிகளுடன், காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா காங்கிரசில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு தீர்வு காணும் நோக்கில், மாநில காங்., பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, ஏற்கனவே நான்கு முறை கர்நாடகாவுக்கு வந்து, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது முதல்வர், துணை முதல்வரை அனுமதிக்கவில்லை. அதேபோன்று இவர் தங்கியுள்ள தனியார் ஹோட்டலுக்கு, வெவ்வேறு துறைகளின் செயலர்களை வரவழைத்து ஆலோசனை நடத்தி, தகவல் பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்களே, சுர்ஜேவாலாவின் செயலால் எரிச்சல் அடைந்துள்ளனர். இதுதொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜண்ணா அளித்த பேட்டி: கட்சி பொறுப்பாளரான சுர்ஜேவாலாவுக்கு, முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்த அதிகாரம் உள்ளது. ஆனால் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது, அரசியல் சாசனத்துக்கு எதிரானது. துறை வாரியான தகவல் பெற்றுள்ளார். இது போன்று செய்து, கட்சி மேலிடத்துக்கு அமைச்சர்கள் மீது நம்பிக்கை இல்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்; இது சரியல்ல. இவ்வாறு அவர் கூறினார். காங்., பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, கர்நாடக அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுவது பொய். அவர் பெங்களூருக்கு வந்தபோது, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுடன் மட்டுமே கூட்டம் நடத்தினார். அரசு அமைந்தபோது, எங்களுக்கு கட்சி மேலிடம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இது எந்த கட்டத்தில் உள்ளது என, தெரிந்து கொள்வதற்காக பெங்களூருக்கு வந்தார். அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவில்லை. - செலுவராயசாமி, அமைச்சர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தியது கண்டிக்கத்தக்கது. இதற்கு அமைச்சர் ராஜண்ணாவும் அதிருப்தி தெரிவித்துள்ளார். தன் கட்சி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுடன் கூட்டம் நடத்த, அவருக்கு அதிகாரம் உள்ளது. அது கட்சி சம்பந்தப்பட்ட விஷயமாகும். ஆனால் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த அதிகாரம் இல்லை. - என்.ரவிகுமார், எம்.எல்.சி., - பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை