உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கோலாரில் எஸ்.சி., கணக்கெடுப்பு மே- 5 முதல் 17 வரை நடத்த முடிவு

கோலாரில் எஸ்.சி., கணக்கெடுப்பு மே- 5 முதல் 17 வரை நடத்த முடிவு

கோலார்; ''கோலார் மாவட்டத்தில் எஸ்.சி., மற்றும் அதன் உட்பிரிவு குறித்து மே- 5 முதல் 17 வரை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது,'' என்று கோலார் கலெக்டர் எம்.ஆர்.ரவி தெரிவித்தார்.எஸ்.சி., மற்றும் அதன் உட்பிரிவு கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக, நேற்று முன்தினம், கோலார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், கலெக்டர் எம்.ஆர்.ரவி பேசியதாவது:நீதிபதி எச்.என்.நாகமோகன்தாஸ் தலைமையிலான கமிஷன் அறிக்கை படி, மாநிலம் முழுதும் எஸ்.சி., மற்றும் அதன் உட்பிரிவுகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.கோலார் மாவட்டத்தில் மே- 5 முதல் மே 17 வரை கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்படும்.வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியில் ஈடுபட்ட துவக்கப்பள்ளி ஆசிரியர்களே, இப்பணியிலும் ஈடுபடுவர்.இதற்கான பணியில் 1,691 ஆசிரியர்கள் ஈடுபடுவர். 10 பேர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. இப்பணியில் ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள். இதற்கான மேற்பார்வை அதிகாரிகளாக 153 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தாலுகா அளவில் கணக்கெடுப்பு குறித்து, இன்று தனிப் பயிற்சி அளிக்கப்படுகிறது.ஒவ்வொரு கிராமத்திலும் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்வர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ