காங்., மூத்த தலைவர் மாரடைப்பில் மரணம்
பெங்களூரு: காங்கிரஸ் மூத்த தலைவர் மேட்டி, 79, மாரடைப்பால் நேற்று காலமானார். கடந்த 2013 முதல், 2016 வரை சித்தராமையா தலைமையிலா ன காங்கிரஸ் அரசில், கலால் துறை அமைச்சராக பதவி வகித்தவர் மேட்டி. இவர் அமைச்சராக இருந்தபோது, பெண்ணை பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதே காரணத்தால் இவர் பதவி விலகவும் நேரிட்டது. கடந்த 2018 சட்டசபை தேர்தலிலும் மேட்டி போட்டியிட்டு தோற்றார். அதன்பின் அரசியலில் தீவிரமாக செயல்படவில்லை. சில நாட்களாக உடல்நலன் பாதிக்கப்பட்டு, பெங்களூரின் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை மாரடைப்பால் மேட்டி காலமானார்.