உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பி.யு.சி.,க்கு பாலியல் கல்வி வல்லுநர் குழு பரிந்துரை

பி.யு.சி.,க்கு பாலியல் கல்வி வல்லுநர் குழு பரிந்துரை

பெங்களூரு: மத்திய அரசு 2020ல், தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வந்தது. இதை ஏற்காத கர்நாடக அரசு, மாநில அளவில் கல்விக் கொள்கை வகுக்க முடிவு செய்தது. இதுகுறித்து, ஆய்வு செய்ய பேராசிரியர் சுக்தேவ் தோராட் தலைமையில், கல்வி வல்லுநர்கள் ஆணையம் அமைத்தது. ஆணையமும் ஆய்வு செய்து, நேற்று முதல்வர் சித்தராமையாவிடம், இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது. அறிக்கையின் முக்கிய பரிந்துரைகள்: நர்சரிக்கு இரண்டு வயது, தொடக்கப் பள்ளிக்கு நான்கு வயது, நடுநிலைப் பள்ளியில் சேர எட்டு வயது நிர்ணயிக்க வேண்டும். புலம் பெயர்ந்த சிறார்களுக்கு, உறைவிட பள்ளி துவக்குங்கள். பஸ் வசதியில்லாத பகுதிகளில், புதிய பள்ளிகள் திறக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் 5ம் வகுப்பு வரை, இரண்டு மொழிகள் - கன்னடம், ஆங்கிலம் கல்வியை கட்டாயமாக்க வேண்டும். கட்டாய கல்வி உரிமை சட்டத்தை, நான்கு வயதில் இருந்து, 18 வயது வரையினருக்கு விஸ்தரிக்க வேண்டும். பி.யு.சி., பாட திட்டங்களில் பாலியல் கல்வியை சேர்க்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை