உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சாலை பள்ளங்களை சரி செய்யுங்கள் துணை முதல்வருக்கு மாணவர்கள் கடிதம்

சாலை பள்ளங்களை சரி செய்யுங்கள் துணை முதல்வருக்கு மாணவர்கள் கடிதம்

பெங்களூரு: 'சாலைகள் தரமாக இல்லை, பள்ளங்கள் நிறைந்த சாலைகளில் பள்ளிக்கு செல்வது கஷ்டமாக உள்ளது. எங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தாருங்கள்' என, துணை முதல்வர் சிவகுமாருக்கு, பள்ளி சிறார்கள் கடிதம் எழுதியுள்ளனர். பெங்களூரின் மஹாதேவபுரா சட்டசபை தொகுதியின், கார்மேலரம் லே - அவுட், குஞ்சூர் பாளையா, சிக்க பெல்லந்துாரில் வசிக்கும் சில மாணவர்கள், துணை முதல்வர் சிவகுமாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: நாங்கள் வசிக்கும் பகுதிகளில், சாலை மிகவும் மோசமாக உள்ளது. தினமும் காலையில் பள்ளிக்கு செல்லும் போதும், மாலை வீட்டுக்கு திரும்பும் போதும் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து நெருக்கடியில் சிக்குகிறோம். சரியான நேரத்துக்கு பள்ளி செல்ல முடியவில்லை. வெளிவட்ட சாலையில் இருந்து, கார்மேலரம் வரை 5 கி.மீ., தொலைவிலான சாலைகள், குறுகலாகவும், பள்ளங்களாகவும் உள்ளன. இந்த சாலையில் பயணிக்க, தினமும் ஒன்றரை மணி நேரம் ஆகிறது. எங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தாருங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து, சமூக ஆர்வலர் ஜோஸ் தஜதுவிட்வில் கூறியதாவது: குஞ்சூர் சாலை, கார்மேலரம், வர்த்துார் பிரதான சாலை, கேர் ஸ்கூல் சாலை உட்பட, பல்வேறு சாலைகள் சிதிலம் அடைந்துள்ளன. இதை சரி செய்யும்படி, இப்பகுதிகளில் வசிக்கும், 100 க்கும் மேற்பட்ட பள்ளி சிறார்கள், துணை முதல்வர் சிவகுமாருக்கு கடிதம் எழுதியுள்ளனர். பிரச்னையை சரி செய்யும்படி, வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்கள் என்னிடம் அளித்துள்ள கடிதங்கள், இன்று போஸ்ட் செய்யப்படும். அடுத்த கட்டமாக, 100 சிறார்கள் எழுதும் கடிதங்கள், விதான் சவுதாவில் உள்ள துணை முதல்வரின் அலுவலகத்துக்கு அனுப்பப்படும். ஆன்லைன் வழியாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மஹாதேவபுரா மண்டலம், 2008ல் பெங்களூரு மாநகராட்சியில் சேர்க்கப்பட்டது. ஆனால் தரமான சாலைகள், சாக்கடைகள் உட்பட மற்ற அடிப்படை வசதிகள் பற்றாக்குறை பிரச்னை, அப்படியே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ....புல் அவுட்... கார்மேலரம், குஞ்சூர் பாளையா, சிக்க பெல்லந்துாரில் உள்ள சாலை பிரச்னைகள், எங்களின் கவனத்துக்கும் வந்துள்ளது. இன்னும் 30 நாட்களுக்குள், பிரச்னைகளை சரி செய்வோம். - ரமேஷ், கமிஷனர், மஹாதேவபுரா மண்டலம் ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ