உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கள்ளக்காதலி டார்ச்சர் வாலிபர் தற்கொலை

கள்ளக்காதலி டார்ச்சர் வாலிபர் தற்கொலை

பீதர் : பீ தர் மாவட்டம், பால்கி தாலுகாவின் கோதிஹிப்பர்கா கிராமத்தை சேர்ந்தவர் பரமேஸ்வர், 30. இவர் பெங்களூரில் வசித்தார். இவர், சப்பாத்தி வியாபாரம் செய்து வந்தார். இவருக்கும், கணவரை பிரிந்து ஒரு குழந்தையுடன் வாழும் பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இந்த கள்ளத்தொடர்பு காரணமாக, அப்பெண் கருவுற்றார். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி, பரமேஸ்வரிடம் பிடிவாதம் பிடித்தார். பெண்ணின் தொந்தரவு தாங்காமல், பரமேஸ்வர் பெங்களூரை விட்டு, தன் சொந்த கிராமத்துக்கே சென்றார். அப்போதும் அப் பெண் விடவில்லை . மகளிர் சங்கத்தை சேர்ந்த ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு, நேற்று முன்தினம் பரமேஸ்வரின் வீட்டுக்கு சென்று, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சண்டை போட்டார். பெண்ணுடன் பேச்சு நடத்தும் நோக்கில், பீதர் நகரின் ஹப்சிகோட் கெஸ்ட் ஹவுசிற்கு சென்றனர். இரவு அங்கு தங்கியிருந்தனர். நேற்று காலை பரமேஸ்வர் தூக்கிட்டு கொண்டதாக, நண்பர்கள் கூறுகின்றனர். ஆனால் தங்கள் மகனை அடித்துக் கொன்றதாக பரமேஸ்வரின் பெற்றோர் குற்றஞ்சாட்டுகின்றனர். இதுகுறித்து, பீதரின் மார்க்கெட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். போலீசாரும் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை