போர் விமானத்தில் பறந்த தேஜஸ்வி சூர்யா!
பெங்களூரு: பெங்களூருவில் நடக்கும் ஏரோ இந்தியா விமான கண்காட்சியில் HTT-40 போர் விமானத்தில் பா.ஜ., எம்.பி., தேஜஸ்வி சூர்யா பயணம் மேற்கொண்டார். பெங்களூரு, எலஹங்காவில் உள்ள விமான பயிற்சி நிலையத்தில், 'ஏரோ இந்தியா விமான கண்காட்சி பிப்.,10ம் தேதி முதல் பிப்.,14 ம் தேதி வரை நடக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய நாடுகளின் விமானப் படைகளும் இந்தக் கண்காட்சியில் பங்கேற்றன. இந்தியா மட்டுமல்லாது, அமெரிக்காவைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்தக் கண்காட்சியில் பல்வேறு தொழில் வாய்ப்புகள், பாதுகாப்பு மற்றும் விமானத் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த விமான கண்காட்சியை பார்ப்பதற்கு ஏராளமானோர் வருகை தந்து வருகின்றனர். அந்த வகையில், விமான கண்காட்சியில் பங்கேற்ற, பா.ஜ., எம்.பி., தேஜஸ்வி சூர்யா HTT-40 போர் விமானத்தில் பயணம் மேற்கொண்டார்.இந்த விமான கண்காட்சியை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் துவங்கி வைத்தார். பல்வேறு தொழில் வாய்ப்புகள், பாதுகாப்பு மற்றும் விமானத் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. பல வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.